ஆள் சேர்ப்பை குறைக்க கூகுள் முடிவு... சுந்தர் பிச்சை அறிவிப்பால் டெக் உலகமே அதிர்ந்தது!!

 
Google

நடப்பு ஆண்டு முழுவதும் ஊழியர்களை பணியமர்த்துவதை குறைக்க கூகுள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த, 'கூகுள்' நிறுவனம், தேடுதல் இணையதளம் தொடர்பான சேவையில், உலகளவில் பல்வேறு சேவைகளை, அளித்து வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் இந்த 'கூகுள்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த, சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் பண பலம் கொண்ட டெஸ்லா, பேஸ்புக், டிவிட்டர் போன்ற முன்னணி பார்சூன் 500 நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தும், புதிய ஊழியர்களைப் பணியில் சேர்ப்பதையும் நிறுத்தியுள்ளது. இந்த வரிசையில் தற்போது தமிழரான சுந்தர் பிச்சை தலைமை வகிக்கும் ஆல்பபெட் நிறுவனமும் இணைந்துள்ளது.

google

இந்நிலையில் பொருளாதார மந்தநிலை உருவாகும் சூழல் இருப்பதால் நடப்பு ஆண்டு முழுவதும் ஊழியர்களை பணியமர்த்துவதை குறைக்க கூகுள் முடிவு செய்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதே நேரத்தில் மார்க்கெட்டிங் வணிகம் மற்றும் நிறுவனத்தின் முக்கிய லாபம் ஈட்டும் துறைகளுக்காக அந்த நிறுவனம் ஆயிரக்கணக்கான புதிய ஊழியர்களை சேர்த்துள்ளது. மேலும் 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் பிற முக்கியப் பணிகளில் ஆட்களை பணியமர்த்துவதில் கூகுள் நிறுவனம் கவனம் செலுத்தும் என சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

sundar

இந்த வார தொடக்கத்தில், டெக் உலகின் மற்றொரு ஜாம்பாவானான மைக்ரோசாப்ட் சிறிய அளவிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. மேலும் மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் அதாவது பேஸ்புக் தாய் நிறுவனம் புதிதாக ஊழியர்களை நியமிப்பதை நிறுத்தவும், ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாகவும் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

From around the web