தான்சானியாவில் 43 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து!! பயணிகளைத் தேடும் மீட்புப்படை!

 
Tanzania

தான்சானியாவில் மோசமான வானிலை காரணமாக தனியார் பயணிகள் விமானம் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்கா நாடான தான்சானியாவில் உள்ள டார் எஸ் சலாம் நகரில் இருந்து புகோபா நகரை நோக்கி பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 43 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் பயணித்து கொண்டிருந்தனர். 

Tanzania

இந்த நிலையில், விமானம் நடுவானில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த விபத்தானது மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப்படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விமானம் 100 மீட்டர் உயரத்தில் நடுவானில் சென்ற போது மோசமான வானிலை நிலவியது. மேலும் மழை பெய்து கொண்டிருந்ததால் விமானம் தண்ணீரில் மூழ்கியது.


பிகோப நகர மண்டல ஆணையர் ஆல்பர்ட் சலமில அளித்த தகவலின் படி, ஏரியில் விழுந்த 26 பயணிகளைக் காப்பாற்றியுள்ளனர். மேலும் 23 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web