ராட்சத கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் பலி!! பதறவைக்கும் வீடியோ

 
Oman

ஓமன் கடற்கரையில் கடல் அலைகளால் 8 இந்தியர்கள் அடித்துச் செல்லப்பட்ட பதறவைக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சசிகாந்த் (42). இவர், மனைவி மற்றும் 9 வயது மகள் ஸ்ருதி, 6 வயது மகன் ஷ்ரேயஸ் ஆகியோருடன், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் வசித்தார். அங்கு விற்பனை மேலாளராக பணியாற்றி வந்தார்.

oman

கடந்த 10-ம் தேதி, விடுமுறையை கொண்டாட, குடும்பத்துடன் ஓமன் நாட்டிற்கு சென்றார். ஓமன் கடற்கரை ஓரம் உள்ள பாறையில், குடும்பத்தினருடன் அமர்ந்திருந்தார். அப்போது, மிக ஆக்ரோஷமாக வந்த ராட்சத அலைகள், பாறையின் மீது வேகமாக மோதின. பாறை மீது விளையாடிக் கொண்டிருந்த சசிகாந்தின் குழந்தைகளை, அந்த ராட்சத அலைகள் கடலுக்குள் இழுத்து சென்றன.

அவர்களை காப்பாற்ற, சசிகாந்தும் கடலுக்குள் குதித்தார், மூவரும் காணாமல் போயினர். சசிகாந்த் மற்றும் அவரது மகன் ஷ்ரேயஸ் உடலை மீட்புப் படையினர் மீட்டனர். மகளை தேடும் பணி நடக்கிறது.


கடற்கரையில் நின்று கொண்டிருந்த மற்றொரு சுற்றுலாப் பயணி ஒருவரால் எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில், சுற்றுலாப் பயணிகளின் அலட்சியத்தால் நெட்டிசன்கள் கோபமடைந்துள்ளனர். “வாழ்க்கையை விட புகைப்படம் எடுப்பதற்கு முன்னுரிமை அளித்துள்ளனர் என்று பதிவிட்டுள்ளார்.

From around the web