ஒரே நேரத்தில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் நீக்கம் - ஃபேஸ்புக் நிறுவனம் அதிரடி

 
Facebook

ஃபேஸ்புக் நிறுவனத்தில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பவராகவும் இருப்பவர் எலான் மஸ்க். இந்த நிலையில், பிரபல சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை கடந்த வாரம் எலான் மஸ்க் தன் வசப்படுத்தினார். 
இதனையடுத்து, ட்விட்டரில் அதிரடி மாற்றங்கள் நடந்து வரும் நிலையில் உலகம் முழுவதும் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 7,500 ஊழியர்களில் 50 சதவிகித ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி கடந்த 5-ம் தேதி ட்விட்டர் நிறுவனம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டது. இதனால், ட்விட்டர் ஊழியர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர்.
Facebook
இந்நிலையில், ட்விட்டரை தொடர்ந்து ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவும் ஊழியர்கள் குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன்படி ஃபேஸ்புக் நிறுவனத்தில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 
இது குறித்து ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் கூறுகையில், 'மெட்டா நிறுவன வரலாற்றில் நாங்கள் செய்த மிகவும் கடினமான சில மாற்றங்கள் தொடர்பாக தகவலை இன்று பகிர்கிறேன். எங்கள் குழுவின் வலிமையை சுமார் 13 சதவீதம் குறைக்கவும், 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எங்கள் திறமையான பணியாளர்களை விடுவிக்கவும் முடிவு செய்துள்ளேன். 
Layoff
குறிப்பிட்ட செலவினங்களைக் குறைப்பது மற்றும் முதல் காலாண்டு வரை ஆட்சேர்ப்பை நிறுத்தி வைப்பதன் மூலம் திறமையான நிறுவனமாக மாறுவதற்கு கூடுதல் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். 
பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 16 வார அடிப்படை ஊதியம் வழங்கப்படும் என்று ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

From around the web