ஒரு ரோபோட்டால் கூட செய்ய முடியாது.. தந்தையிடம் கெஞ்சும் பள்ளி சிறுமி!! வைரல் வீடியோ

 
Ting-Ting

சீனாவில் பள்ளி மாணவி ஒருவர் தனக்கு அதிக நேரம் விளையாடத் தருமாறு தந்தையிடம் கெஞ்சும் வீடியோ சீன சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

சீனாவின் தியான்ஜின் நகரில் உள்ள ஆரம்பப்பள்ளியில் படிக்கும் சிறுமி ஒருவர் தனக்கு படிப்பை தவிர விளையாடவும் நேரம் கொடுங்கள் என கதறி அழுது கெஞ்சும் வீடியோவை சிறுமியின் தந்தை கடந்த மாதம் 24-ம் தேதி ‘டூயின்’ சமூக வலைதளத்தில் தன்னுடைய பக்கத்தில் பதிவேற்றி உள்ளார்.

அந்த வீடியோவில், அந்த சிறுமி டிங் டிங் தனது தந்தையிடம் அழுதபடியே சண்டையிட்டு மன்றாடும் படி பேசியிருக்கிறார். அதில், “என் கேள்விக்கு முதலில் பதில் சொல்ல முடியுமா? அது ஓகேவா? ஒரே ஒரு கேள்விதான் கேட்பேன். நான் உங்கள மோசமாகவா நடத்துறேனாநான் ஏதாவது தவறு செய்கிறேன்? அது எதுவாக இருந்தாலும், நீங்கள் என்னிடம் சொல்லுங்கள். நான் மாறுகிறேன்.

ஆனால் எனக்கு எனது ஓய்வு நேரம் தேவை. எனக்குனு எந்த சுதந்திரமும் இருக்கல. என்னால் எனது முழு நேரத்தையும் படிப்பில் செலவிட முடியாது, படிப்பதற்கு, எனக்கு வேலை-வாழ்க்கை சமநிலை தேவை. உங்களுக்கு புரிகிறதா?

Ting-Ting

என் வீட்டுப்பாடம் எல்லாம் முடிச்சுட்டேன். அப்படி இருக்கப்போ நான் ஏன் விளையாட கூடாது? அதுல என்ன உங்களுக்கு பிரச்னை?” என அந்த சிறுமி கேட்க அதற்கு அவரது தந்தை, “அதுல எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் ரொம்ப நேரம் விளையாட கூடாது.” என சொல்கிறார்.

அதற்கு, “தினமும் இரவு 9 மணிக்கெல்லாம் தூங்க போகிறேன். நான் என்ன நடு ராத்திரிலயா விளையாட போறேன்?” என சிறுமி கேட்க, “இப்போ நல்லா படிச்சாதான் எதிர்காலத்தில நல்ல பொண்ணா இருப்ப” என அந்த தந்தை சொல்ல, “எதிர்காலத்துல என்ன, எப்போவுமே நான் நல்ல பொண்ணுதான்” என சிறுமி கூற, “இப்படியே இருந்தால் நல்லதுதான். உன் கிட்ட இருந்து பெருசா எதுவும் எதிர்பாக்கல.” என தந்தையும் கூறியிருக்கிறார்.


இதை தொடர்ந்து, “நிறைய பண்ணனும்னு என்கிட்ட எதிர்பாக்காதீங்க. ஏன்னா நீங்க சொல்றா மாதிரி இருக்கனும்னா ரோபோட்டால் கூட செய்ய முடியாது. எனக்கு 8 கைகளே இருந்தாலும் என்னால செய்ய முடியாது. ஒன்னு மட்டும் தெளிவா சொல்லிக்கிறேன். தயவுசெஞ்சு எங்க குழந்தை பருவத்த பாதுகாத்து வைங்க.” என அந்த சிறிமி கெஞ்ச, “கண்டிப்பா செய்வேன்” என அந்த தந்தையும் வாக்கு கொடுக்கிறார்.

தந்தை-மகள் இருவரின் கூட்டுக் கணக்கில் வெளியிடப்பட்ட வீடியோ, இரண்டு வாரங்களில் மூன்று மில்லியன் பார்வைகளைப் பெற்றதுள்ளது. தற்போது இந்த வீடியோ எல்லா சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு பலரது கமெண்ட்ஸ்களையும் பெற்று வருகிறது.

From around the web