ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவு தற்காலிகமாக நிறுத்தம் - எலான் மஸ்க்

 
Twitter-confirms-sale-of-company-to-Elon-Musk


டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பவராகவும் இருப்பவர் எலான் மஸ்க். இவர் சமீபத்தில் ட்விட்டர் சமூக ஊடக நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.3.30 லட்சம் கோடி) வாங்குவதாக ஒப்பந்தம்  செய்தார்.

அதை தொடர்ந்து, அவர் தனது மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் 44 லட்சம் பங்குகளை விற்பனை செய்தார். ட்விட்டர் ஊடக நிறுவனத்தை வாங்கும் பேரத்தை முடிப்பதற்காக இவர் தனது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்திருப்பதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக எலான் மஸ்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், போலி கணக்குகள் குறித்து தகவல்கள் திரட்டுவதற்கு அவகாசம் தேவைப்படுவதாகவும், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அரசு ஊழியர்கள் ,வணிக நிறுவனங்கள் ட்வீட் செய்தால் இனி கட்டணம் வசூலிக்கப்படும் என எலான் மஸ்க் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web