இத்தாலியில் பொருளாதார நெருக்கடி... பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மரியா டிராகி!!

 
Mario Draghi

இத்தாலியில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் கடந்த 2021-ம் ஆண்டு அதிபர் மரியோ டிராகி பிரதமராக தேர்வானார். இத்தாலியில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் அதிகரித்து வருகிறன்றன. இதன் காரணமாக இத்தாலி மோசமான பொருளாதார நிலையை எதிர்கொண்டுள்ளது.

இதையடுத்து, பிரதமர் மரியா டிராகிக்கு எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கூட்டணி கட்சிகள் தங்களின் ஆதரவை விலக்கிக்கொண்டனர்.

Mario Draghi

இதன் காரணமாக, பெருன்பான்மை இல்லாததால் இன்று மரியோ டிராகி அதிபர் செர்ஜியோ மாட்ரெல்லா முன்னிலையில்  தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால், அந்நாட்டில் வரும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் எனத் தெரிகிறது.

முன்னதாக இலங்கையில் பொருளாதார நெருக்கடிகளை சீரமைக்க கோரி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சேவும் அதிபர் பதவியில் இருந்து கோத்தபாய ராஜபக்சேவும் ராஜினாமா செய்தனர். இதனையடுத்து இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே தேர்வாகியுள்ளார்.

Mario Draghi

அதேபோல் பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் தூக்கியடிக்கப்பட்டு ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமரானார். அண்மையில் பிரிட்டனில் ஊழல் புகாரில் சிக்கியதால் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவியை பறிகொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web