லிபியாவில் டீசல் டேங்கர் லாரி வெடித்து சிதறிய விபத்தில் 9 பேர் உடல் கருகி பலி!!

 
Libya

லிபியாவில் டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் 9 பேர் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வட ஆப்பிரிக்க நாடான லிபியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பென்ட் பய்யாவில் டீசல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நிலைதடுமாறி சாலையின் நடுவே கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது. அதைதொடர்ந்து டோங்கரில் இருந்த டீசல் சாலையில் கொட்டியது.

இந்த நிலையில் டேங்கர் லாரி வெடிக்கக்கூடும் என்ற எச்சரிக்கையையும் மீறி மக்கள் டீசலை சேகரிக்க அங்கு குவிந்தனர். அவர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு டீசலை சேகரித்துக்கொண்டிருந்தபோது, கவிழ்ந்துகிடந்த டேங்கர் லாரி திடீரென வெடித்து சிதறியது.

libya

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் தீயின் கோரப்பிடியில் சிக்கி 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 70-க்கும் அதிகமானோர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

libya

மேலும் இந்த விபத்தினால் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த மின்கம்பங்கள், வணிக கட்டிடங்கள் மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்துள்ளன. இதைத்தொடர்ந்து போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web