சீனாவில் கொரோனா நோயாளிகள் தற்கொலை... வெளியான அதிர்ச்சி தகவல்!!

 
china

சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் தற்கொலை செய்துக் கொள்ளும் அவலம் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன.

China

இந்த நிலையில் சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பான தகவல்களை தெரிவிக்க அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது. இந்த சூழலில் அந்நாட்டின் கிராமபுறங்களில் கொரோனா பரவல் மிகவும் மோசமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் அதிகமாக பாதிக்கப்படும் சூழலில் கிராமபுற மருத்துவமனைகளில் போதிய வசதி மற்றும் மருந்துகள் கிடைக்கவில்லை. இதன் காரணமாக அந்த மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளதாகவும், நடுத்தர நகரங்களுக்கு மக்கள் சிகிச்சைக்கு சென்றாலும் அங்கும் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

dead-body

மறுபுறம் கொரோனாவால் முதியவர்கள் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகி வரும் நிலையில், அவர்கள் சிகிச்சை கிடைக்காமல் மன அழுத்தம் அடைந்து தற்கொலை செய்துக் கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

From around the web