மஸ்கட் விமான நிலையத்தில் பரபரப்பு.. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீரென தீப்பிடித்து விபத்து...!

 
Oman

மஸ்கட் விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓமனில் இன்று காலை மஸ்கட் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தீபிடித்து புகை வெளியேறத் தொடங்கியதையடுத்து விமானம் நிறுத்தப்பட்டு விமானத்தில் இருந்து பயணிகளை அவசரமாக வெளுயேற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மஸ்கட் விமான நிலையத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Oman

இது குறித்து வெளியான தகவிலில், ஏர் இந்தியா எக்ஸ்பரஸ் விமானமானது மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட தயாராகி ஓடுபாதையிர் சென்று கொண்டு கொண்டிருந்த போது விமானத்தின் எஞ்சினில் இருந்து கரும் புகை வருவதை கண்ட விமானி அவசரமாக விமானத்தை நிறுத்தியதாகவும் உடனடியாக பயணிகள் ஸ்லைடுகள் மூலம் வெளியேற்றப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து ஓமனின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த சம்பவம் தற்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் கையாளப்படுகிறது. பயணிகள் மற்றும் விமான போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை” என்று கூறியுள்ளது. விமானத்தில் 141 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் இருந்தனர் என்றும் அவசர வெளியேற்றத்தின் போது 14 பேருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தற்போது அந்த பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீவிபத்துக்குள்ளான விமானம் காலை 11.30 மணியளவில் புறப்படவிருந்தது குறிப்பிடத்தக்கது.

From around the web