அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் குண்டுவெடிப்பு; 8 பேர் படுகாயம்

 
chicago

அமெரிக்காவில் 3 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென குண்டுவெடித்ததில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் சிகாகோ மாநகரத்தின் சவுத் ஆஸ்டின் பகுதியில் உள்ள வெஸ்ட் எண்ட் அவென்யூவில் 3 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்தில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த கட்டிடத்தின் மேல் தளம் முற்றிலுமாக சிதைந்தது. மேலும் கட்டிடத்தில் இருந்து கண்ணாடிகளும், கற்களும் அந்த பகுதி முழுவதும் வெடித்துச் சிதறின. 

chicago

இது குறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிகாகோ தீயணைப்புத் துறையினர், கட்டிட இடிபாடுகளில் படுகாயங்களுடன் சிக்கி இருந்த 8 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக ஏபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

கட்டிடத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு விட்டதாக துணை தீயணைப்பு ஆணையர் மார்க் ஃபர்மேன் தெரிவித்துள்ளார். இந்த வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

chicago
 
இருப்பினும் அந்த கட்டிடத்தில் கடந்த 12 ஆண்டுகளாக வருடாந்திர பராமரிப்பு சோதனைகளை மேற்கொள்ளவில்லை எனவும், புகைமானிகளை மாற்றாமல் தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

From around the web