விமான நிலையத்திற்கு வெடிகுண்டுடன் வந்த அமெரிக்க தம்பதி..! இஸ்ரேலில் பரபரப்பு!!

இஸ்ரேல் விமான நிலையத்திற்கு வெடிகுண்டுடன் வந்த அமெரிக்க தம்பதியை கண்டு சக பயணிகள் அலயறிடித்து ஓடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவை சேர்ந்த தம்பதி இஸ்ரேல் நாட்டின் கோலன் பகுதிக்கு சுற்றுலா சென்று இருந்தனர். அப்போது, கீழே கிடந்த ஒரு பொருளை கண்டு எடுத்துள்ளனர். அதனை தங்கள் நாட்டுக்கு கொண்டு செல்ல தம்பதி திட்டமிட்டுள்ளனர்.
விமான நிலையத்திற்கு அந்த மர்மபொருளை தம்பதி கொண்டு சென்ற நிலையில், பாதுகாப்பு சோதனையின் போது அது வெடிக்காத குண்டு என்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதைக் கண்ட அதிர்ச்சியடைந்த சக பயணிகள் விமான நிலையத்திற்குள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து அமெரிக்க தம்பதியினரிடம் பல்வேறு கட்ட விசாரணைக்கு பின் வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தின் போது தப்பிக்கும் முயற்சியில் சிலர் கீழே விழுந்து காயமடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.