அமெரிக்கா உங்களை கண்டுபிடித்து கொள்ளும் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

 
Al-Qaeda
உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் பயங்கரவாத அமைப்பு அல் கொய்தாவின் தலைவராகவும், மாஸ்டர் மைன்ட்டாகவும் செயல்பட்டு வந்த ஒசாமா பின் லேடனை அமெரிக்காவின் சீல் படையினர் அதிரடியாக பாகிஸ்தானில் வைத்து சுட்டுக் கொன்றனர். 
இதன் பின்னர் இந்த அமைப்பு தங்களது செயல்பாடுகளை குறைத்துக் கொண்டநிலையில் தற்போது மீண்டும் தலை தூக்கி உள்ளது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் சிஐஏ ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அல்கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Al-Qaeda
ஆனால் நிர்வாகம் அவரது மரணத்தை உறுதிப்படுத்தும் வரை தகவலை வெளியிட தாமதப்படுத்தி வருகிறது. அல்-ஜவாஹ்ரி கொல்லப்பட்டதை உறுதிப்படுத்த வெள்ளை மாளிகை அதிகாரிகள் மறுத்துவிட்டனர், ஆனால் ஒரு அறிக்கையில் "அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் ஒரு குறிப்பிடத்தக்க அல்கொய்தா இலக்குக்கு எதிராக பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை நடத்தியது. இந்த நடவடிக்கை வெற்றிகரமாக இருந்தது மற்றும் பொதுமக்கள் உயிரிழப்பு எதுவும் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அல்கொய்தா தலைவர் ஜவாஹிரி கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "அல்கொய்தா தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி காபூலில் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். நீதி வழங்கப்பட்டுள்ளது. எவ்வளவு காலம் சென்றாலும், நீங்கள் எங்கு மறைந்திருந்தாலும், எங்கள் மக்களுக்கு நீங்கள் அச்சுறுத்தலாக இருந்தால், அமெரிக்கா உங்களை கண்டுபிடித்து தண்டிக்கும்" என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
Joe-Biden
அல்-கொய்தா இயக்க தலைவன் ஒசாமா பின்லேடனோடு நெருங்கிய தொடர்புடைய அய்மான் அல்-ஜவாரியை அதிமுக்கிய பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்திருந்த அமெரிக்க அரசு, கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து தேடி வந்தது குறிப்பிடத்தக்கது.

From around the web