ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது

 
afghanistan-earthquake-kills

ஆப்கானிஸ்தான் நாட்டின் தென்கிழக்கே கோஸ்ட் நகருக்கு அருகே இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது.

இதனால் கோஸ்ட் நகர் பகுதியில் அமைந்துள்ள பல்வேறு அடிக்குமாடி கட்டிடங்கள் சீட்டு கட்டுபோல் சரிந்து விழுந்தது. அதிகாலை நேரம் என்பதால் மக்கள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர்.

afghanistan-earthquake-kills

நிலநடுக்க உயிரிழப்பு தற்போது ஆயிரத்தை கடந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இடிபாடுகளில் சிக்கி 1,500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பக்டிகா மாகாணத்தில்தான் பெரும்பாலான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 600-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். கோஸ்ட், பக்டிகா மாகாணங்களில் பல கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

afghanistan-earthquake-kills

ஆப்கானிஸ்தான் தலீபான் ஆட்சியை கைப்பற்றிய பிறகு சர்வதேச தொண்டு நிறுவனங்கள் பலவும் அந்த நாட்டை விட்டு வெளியேறிவிட்டன. இதனால், மீட்பு பணிகளில் கடும் தொய்வு ஏற்பட்டுள்ளது. பக்டிகா மாகாணங்களில் இருந்து பாதிக்கப்பட்ட மக்கள், ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்படும் காட்சிகள் உள்ளூர் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

From around the web