பேருந்தை ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சென்ற ரயில்; வங்கதேசத்தில் நடந்த கோர விபத்தில் 11 பேர் பலி!!

 
Bangladesh
வங்கதேசத்தில் பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசம் சிட்டகாங் மாவட்டத்தில் உள்ள ஆளில்லா ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற மினி பஸ் மீது டாக்கா நோக்கிச் செல்லும் ப்ரோவதி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. ரயிலில் சிக்கிய பஸ் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சென்றது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். 
Bangladesh
விபத்துக்குள்ளான மினி பஸ்சில் பயணம் செய்தவர்கள், அமன் பஜார் பகுதியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆவார்கள். இவர்கள் மிர்ஷாராய் மலைப் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பிய போது விபத்தில் சிக்கி கொண்டனர். 
விபத்தில் உயிரிழந்தவர்களில் 7 மாணவர்களும், 4 ஆசிரியர்களும் உள்ளடங்குவர். உயிரிழந்தவர்களின் உடல்கள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டு மாலையில் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக சிட்டகாங் தீயணைப்புப் பிரிவு ஆலுவலகத்தின் துணை இயக்குநர் அனிசுர் ரஹ்மான் தெரிவித்தார். 
மிர்சராய் காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி கபீர் ஹொசைன் கூறுகையில், விபத்தில் காயமடைந்த 7 பேர் சட்டோகிராம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Bangladesh
விபத்துக்கான காரணத்தை விசாரிக்க வங்கதேச ரயில்வே 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. ரயில்வே கிழக்கு மண்டல துணை இயக்குனர் (போக்குவரத்து வணிகம்) அன்சார் அலி தலைமையிலான குழு 7 நாட்களுக்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக ரெயில்வே கேட்மேன் கைது செய்யப்பட்டார்.

From around the web