வேகமாக வந்து மோதிய கார்...  விபத்தில் சிக்கிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!!

 
Ukraine

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கார் விபத்தில் சிக்கியதாக அந்நாட்டின் தி கீவ் இண்டிபென்டெண்ட் என்ற ஊடகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாத இறுதியில், ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் தொடங்கிய போரானது 6 மாதங்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. போரில் ரஷ்யா கைப்பற்றிய இடங்களை உக்ரைன் மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில், கிழக்கு உக்ரைனின் காா்கிவ் பிராந்தியத்தில், கடந்த சில நாள்களாக தீவிர எதிா்த் தாக்குதல் நடத்தி உக்ரைன் படையினரால் மீட்கப்பட்ட பகுதிகளுக்கு அதிபா் ஸெலென்ஸ்கி புதன்கிழமை திடீா் பயணம் மேற்கொண்டாா்.

Ukraine

இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் தி கீவ் இண்டிபென்டெண்ட் என்ற ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் செய்தி தொடர்பாளர் செர்ஹை நிகிபோரோவ் தனது ஃபேஸ்புக் பதிவில், அதிபரின் கார் மற்றும் பாதுகாப்பு வாகனம் மீது கார் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஜெலன்ஸ்கியுடன் சென்ற மருத்துவர்கள் உடனடியாக ஜெலன்ஸ்கிக்கு பரிசோதனை செய்தனர். அவருக்கு லேசான காயமே ஏற்பட்டு உள்ளது. அவரது வாகன ஓட்டுனருக்கும் மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டன.


இதன்பின்னர், ஆம்புலன்ஸ் ஒன்றில் அவர் கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து பற்றி போலீசார் முழு அளவில் விசாரணை நடத்துவார்கள் என நிகிபோரோவ் தெரிவித்துள்ளார் என அந்த ஊடக தகவல் தெரிவிக்கின்றது.

From around the web