5 அடி முதலையை அப்படியே விழுங்கிய பாம்பு..  புளோரிடா காட்டில் நடந்த சம்பவம்!! வைரல் வீடியோ

 
Florida

புளோரிடாவில் உள்ள பர்மிய மலைப்பாம்பின் வயிற்றில் 5 அடி நீள முதலை ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 18 அடி மலைப்பாம்பு எவர்க்லேட்ஸ் தேசிய பூங்காவில் தொழிலாளர்களால் பிடிக்கப்பட்டு அந்த இடத்தில் கருணைக்கொலை செய்யப்பட்டதாக புளோரிடாவைச் சேர்ந்த புவியியலாளர் ரோஸி மூர் நேற்று யுஎஸ்ஏ டுடேவிடம் தெரிவித்தார்.

Florida

இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், விஞ்ஞானிகள் கையுறைகளை அணிந்து மலைப்பாம்பின் வயிற்றில் உள்ள வீக்கத்தை தரையில் வெட்டுவதற்கு முன்பு மதிப்பிடுவதைக் காட்டுகிறது.

விஞ்ஞானிகள் பாம்பின் வயிற்றில் இருந்து முதலையை எடுப்பதைக் காணலாம். முதலை அப்படியே முழுமையாக இருந்தது. வெளிப்புற தோல் அடுக்கில் சிறிது சிதைவு, ஆஸ்டியோடெர்ம்கள் (தோலில் எலும்பு படிவுகள்) முற்றிலும் அப்படியே இருந்தன என்று ரோஸி மூர் கூறினார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இதுவரை 3.3 மல்லியன் பயனர்கள் லைக் செய்துள்ளனர்.

From around the web