காதலிக்கு ஒரு முத்தம்... போலீசில் சிக்கிக்கொண்ட பிரபல போதைபொருள் கடத்தல் மன்னன்!!

 
El-Chapo-Cartel-Member-Arrested-After-Model-Girlfriend-posts-picture-on-facebook

காதலியின் முத்ததால் பிரபல போதைபொருள் கடத்தல் மன்னன் பிரையன் டொனாசியானோ ஓல்குயின் பெர்டுகோ மாட்டிக்கொண்டார்.

மெக்சிகோவின் பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் பிரையன் டொனாசியானோ ஓல்குயின் பெர்டுகோ. இவர் சுமார் 200 நாடுகளுக்கும் மேல் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக உள்ளார்.196 நாடுகளில் அவரைக் கைது செய்ய இன்டர்போலால் ரெட் வாரண்ட் பிறபிக்கப்பட்டு உள்ளது. இதனால் பெர்டுகோ தலைமறைவாக இருந்தார்.

இந்த நிலையில் பெர்டுகோவின் கொலம்பிய காதலி அவர்களின் புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பகிர்ந்ததால் கைது செய்யப்பட்டார்.

கலியில் உள்ள இயேசு கிறிஸ்துவின் மலை உச்சியில் உள்ள கிறிஸ்டோ ரேயில் பெர்டுகோ காதலியுடன் உல்லாசமாக பொழுதை களித்து உள்ளார். அப்போது அவர் காதலியை முத்தமிட்டு உள்ளார்.

El-Chapo-Cartel-Member-Arrested-After-Model-Girlfriend-posts-picture-on-facebook

இந்த புகைப்படங்களை காதலி தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார். புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு நிறுவனம் கொலம்பிய அதிகாரிகளை எச்சரித்தது, இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

போதைபொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் பெர்டுகோ இப்போது அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவார்.

From around the web