ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு - 33 பேர் பலி

 
Blast-hits-mosque-in-Afghanistans-Kunduz

ஆப்கானிஸ்தான் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 33 பேர் பலியாகி உள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் வடக்கு குண்டூஸ் மாகாணத்தின் இமாம் சாஹிப் மாவட்டத்தில் உள்ள மவ்லவி செகந்தர் மசூதியில் இன்று குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியதில் இருந்து, குண்டுவெடிப்புகளும், தாக்குதல்களும் வழக்கமாகி வருகின்றன.

இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

From around the web