9 ஆண்டுகளில் 90 பாலியல் பலாத்கார சம்பவங்கள்.. சீரியல் ரேப்பிஸ்ட்க்கு 42 ஆயுள் தண்டனை!

 
SAF SAF

தென்னாப்பிரிக்காவில் 90 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர குற்றவாளிக்கு 42 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டள்ளது.

தென்னாப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த கோசிநதி பகாதி என்ற நபர் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு கிழக்கே உள்ள எகுர்ஹுலேனி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். 2012 முதல் 2021-க்கு இடைப்பட்ட 9 ஆண்டுகளில் 9 வயது சிறுமி முதல் 44 வயது பெண் வரை என 90 பாலியல் பலாத்கார சம்பவங்களில் இவன் ஈடுபட்டுள்ளான்.

rape

பகாதியால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பள்ளிக் குழந்தைகள் என்று தென்னாப்பிரிக்காவின் தேசிய வழக்கு ஆணையம் தெரிவித்துள்ளது. பெண்கள் வேலைக்கும் போகும் போதும் பள்ளி மாணவிகள் பள்ளிக்குச் செல்லும்போதும் அவர்களை பின்தொடர்ந்து, கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். 

சில பெண்களை அவர்களின் சொந்த வீடுகளுக்கே சென்று எலக்ட்ரீஷியன் போல் நடித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். கடந்த 2021-ம் ஆண்டு கைது செய்யப்பட்டபோது, காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் பகாதி தனது காலை இழந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

judgement

இந்த நிலையில், 90 பாலியல் பலாத்கார சம்பவங்களில் ஈடுபட்ட பகாதிக்கு 42 ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web