உலகம் முழுவதும் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 7.97 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்!!

 
WCV

கடந்த 24 மணி நிலவரப்படி உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 57.06 கோடியாக உயந்துள்ளது.

முதன்முதலாக சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டு இருக்கிறது. தொற்று பரவி கிட்டதட்ட பல மாதங்கள் ஆகியுள்ள போதிலும் வைரசின் ருத்ரா தாண்டவம் அடங்கியபாடில்லை. கொரோனாக்கு எதிராக தடுப்பூசி செலுத்தி வரும்நிலையில், பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 57 கோடியே 06 லட்சத்து 68 ஆயிரத்து 974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 2 கோடியே 27 லட்சத்து 32 ஆயிரத்து 547 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 40 ஆயிரத்து 506 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 54 கோடியே 15 லட்சத்து 41 ஆயிரத்து 540 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், கொரோனாவால் இதுவரை 63 லட்சத்து 95 ஆயிரத்து 277 பேர் உயிரிழந்துள்ளனர்.

From around the web