ஒரே நாளில் 710 ரஷ்ய வீரர்கள் பலி.. உக்ரைன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

 
Ukraine

தங்களுக்கு எதிரான போரில் ஒரே நாளில் 710 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகள் இடையேயான போரானது 10 மாதங்களுக்கும் கூடுதலாக நீடித்து வருகிறது. இப்போரில் உக்ரையினுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து நவீன ஆயுதங்கள் வழங்கி வருகின்றன. இதனால் உக்ரைன் படைகள் ரஷ்ய தாக்குதலை சமாளித்து முன்னேறி வருகின்றன.

Ukraine

இதில், இரு நாட்டை சேர்ந்த வீரர்களும் உயிரிழந்து வருகின்றனர். அவர்களில் சிலர் சிறை பிடிக்கப்பட்டு வருகின்றனர். பின்னர் அவர்கள் விடுவிக்கவும் செய்யப்படுகின்றனர்.

இந்த நிலையில் உக்ரைனுக்கு எதிரான போரில் ஒரே நாளில் 710 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், பாக்முட் நகரப் பகுதியில் ரஷ்ய வீரர்களின் உடல்கள் குவிந்து கிடப்பதாக தெரிவித்துள்ளார்.

Volodymyr Zelenskyy

உக்ரைனின் உப்பு சுரங்க நகரம் என அழைக்கப்படும் சோலேடார் இரு தரப்பினருக்கும் நடந்த மோதலில் ரஷ்ய வீரர்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் ஒரு நாளில் வெவ்வேறு இடங்களில் நடந்த தாக்குதலில் 710 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 1,12,470 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web