அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் 6 இந்திய வம்சாவளியினர் வெற்றி!

 
US Election US Election

அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் 6 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்று வாக்கு எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் 277 எலெக்ட்ரோல் வாக்குகளை (28 மாகாணங்களில் வெற்றி) பெற்று முன்னிலை உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 224 எலெக்ட்ரோல் வாக்குகளை (19 மாகாணங்களில் வெற்றி) பெற்றுள்ளார்.

election

இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதாக பாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப் விரைவில் பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் 6 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் இந்திய வம்சாவளி வழக்கறிஞர் சுஹாஸ் சுப்ரமணியம், வர்ஜீனியா மற்றும் கிழக்குக் கடற்கரையில் இருந்து மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி உறுப்பினர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

Trump

தற்போது விர்ஜீனியா மாகாண செனட்டராக பதவி வகித்து வரும் அவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் மைக் கிளான்சியை தோற்கடித்துள்ளார். அதே போல், ஏற்கனவே மக்கள் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களாக பதவி வகித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீ தானேதர், ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா, பிரமிலா ஜெயபால் மற்றும் அமி பேரா ஆகிய 5 பேரும் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று தங்கள் பதவியை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். 

From around the web