5 நாட்கள் ஊரடங்கு.. கொரோனா வைரஸ் பாதிப்பு திடீர் அதிகரிப்பு!!

 
North korea

வடகொரியாவின் தலைநகரான பியாங்யாங்கில் 5 நாள் ஊரடங்கு உத்தரவை அந்நாட்டு அரசு பிறபித்துள்ளது.

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் அது பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. இப்படி தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால், இதை சமாளிக்க உலகின் பல்வேறு நாடுகளும் திணறி வருகிறது. வளர்ந்த நாடுகள் தொடங்கி பின் தங்கிய நாடுகள் வரை எதுவும் இதற்கு தப்பவில்லை.

சீனாவில் கடந்த சில மாதங்களாக மீண்டும் கொரானா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்றும் அதனால் தலைநகர் பீஜிங் உள்பட பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Omicron

இந்த நிலையில் சீனாவை அடுத்து வடகொரியாவிலும் கொரனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் அந்நாட்டில் உள்ள நிலவரங்கள் எதுவுமே வெளியில் தெரியாததால் எந்த அளவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறது என்பது உலக சுகாதார மையத்திற்கு தெரியவில்லை.

இந்த நிலையில் திடீரென வடகொரியாவில் 5 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வடகொரியாவின் தலைநகர் உள்பட ஒரு சில நகரங்களில் மிக மோசமான கொரோனா பாதிப்பு இருந்து வருவதை அடுத்து 5 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் 5 நாட்களுக்கு பின்னர் நிலைமைக்கு ஏற்ப ஊரடங்கு உத்தரவு நீடிப்பது அல்லது விலக்குவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Corona-virus

ஊரடங்கு உத்தரவு பிறக்க பிறப்பிக்கப்பட்ட 5 நாட்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு உடையவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தடுப்பூசி உள்ளிட்ட முன் பாதுகாப்பு நிலையில் பாதுகாப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வடகொரியா அரசு அறிவித்துள்ளது. வடகொரியாவில் திடீரென 5 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

From around the web