அமெரிக்க கிரீன் கார்டுக்காக 4 லட்சம் இந்தியர்கள் காத்திருந்து இறப்பார்கள்.. வெளியான அதிர்ச்சி ஆய்வு அறிக்கை!

 
H1B visa

அமெரிக்காவில் கிரீன் கார்டுக்காக விண்ணப்பித்து காத்திருக்கும் இந்தியர்களில் சுமார் 4 லட்சம் பேர், கிரீன் கார்டு கிடைப்பதற்கு முன்பாகவே இறந்துவிடுவார்கள் என புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இந்தியர்கள் உள்ளிட்ட ஏராளமான வெளிநாட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். எனினும் அதில் சிலருக்கு மட்டுமே அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கான கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நாட்டுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கிரீன் கார்டு ஒதுக்கப்படும் என்பதால் அதற்காக விண்ணப்பித்து பல ஆயிரம் இந்தியர்கள் அமெரிக்காவில் காத்துள்ளனர். 

USA

இவ்வாறு கிரீன் கார்டுக்காக விண்ணப்பித்து காத்திருக்கும் இந்தியர்களில் சுமார் 4 லட்சம் பேர், கிரீன் கார்டு கிடைப்பதற்கு முன்பாகவே இறந்துவிடுவார்கள் என புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேடோ நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, தற்போது நாட்டில் நிலுவையில் உள்ள 18 லட்சம் வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டு விண்ணப்பங்களில் 63 சதவீதம் இந்தியர்களின் விண்ணப்பங்கள். இதுதவிர குடும்ப அமைப்பிலிருந்து வரப்பெற்ற 83 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.

Visa

இந்தியாவில் இருந்து புதிதாக விண்ணப்பிக்கும் நபர்கள், 134 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருக்கும். இதன்மூலம், வேலைவாய்ப்பு அடிப்படையிலான விண்ணப்பதாரர்கள் சுமார் 4.24 லட்சம் பேர் காத்திருக்கும் காலத்தில் மரணம் அடைவார்கள். அவர்களில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் இந்தியர்களாக இருப்பார்கள். புதிய முதலாளிகளால் வழங்கப்படும் விண்ணப்பதாரர்களில் இந்தியர்கள் பாதியாக இருப்பதால், புதிதாக ஸ்பான்சர் செய்யப்பட்டவர்களில் பாதி பேர் கிரீன் கார்டு பெறுவதற்கு முன்பே இறந்துவிடுவார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web