பாகிஸ்தானில் 3 குழந்தைகள் பரிதாப பலி.. கண்ணிவெடியில் கால் வைத்ததால் விபரீதம்

 
Bomb

பாகிஸ்தானில் கண்ணிவெடியில் சிக்கி 3 குழந்தைகள் பிலயான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் கைபர் பக்டுங்க்வா மாகாணத்தில் உள்ள தெற்கு வாசிரிஸ்தான் மாவட்டத்தில் நேற்று உள்ளூர் அணிகளுக்கு இடையிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண்பதற்காக வான்னா டவுன் பகுதியைச் சேர்ந்த 4 குழந்தைகள் சென்றுள்ளனர்.

boy-dead-body

அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது தரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி மீது தவறுதலாக கால் வைத்தனர். அதனால், பெரிய சத்தத்துடன் கண்ணிவெடி வெடித்துச் சிதறியது. இதில் 3 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Police

இந்த  நிலையில், படுகாயமடைந்த மற்றொரு குழந்தையை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த இடத்தில் கண்ணிவெடியை பதுக்கி வைத்தது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தெற்கு வாசிரிஸ்தான் பகுதியில் நீண்ட காலமாக கிளர்ச்சியாளர்கள் பதுங்கியிருந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

From around the web