5 பெண்களை கர்ப்பமாக்கிய 2K கிட்.. ஒரே நேரத்தில் 5 பேருக்கும் வளைகாப்பு நடத்தி அசத்திய இசைக்கலைஞர்!
அமெரிக்காவில் 22 வயதான இசைக்கலைஞர் ஒருவர் 5 பெண்களை கர்ப்பமாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த இசைக்கலைஞரான ஸெடி, வயது வித்தியாசம் கொண்ட 5 பெண்களை கர்ப்பமாக்கி உள்ளார். அந்த 5 பேருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பு நடத்தப்பட்ட சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
ஸெடி, 5 பேருடன் பல நேரங்களில் தொடர்பு வைத்திருந்தபோதிலும், அனைவரும் சில நாட்கள் வித்தியாசத்தில் கர்ப்பம் அடைந்ததாக தெரிவித்து உள்ளார். 2கே கிட்ஸ்சான இந்த ஸெடிக்கு வயது 22 தான் ஆகிறது.
இந்த சம்பவம் ஸெடியால் கர்ப்பமாக்கப்பட்ட 29 வயதாகும் ஆஷ்லே என்ற பெண், சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டதை தொடர்ந்து உலகுக்கு தெரியவந்தது. இந்த பதிவை 1 கோடிக்கும் அதிகமானோர் பார்த்து அதனை பகிர்ந்துள்ளனர். எல்லாம் நல்லபடியாக முடிந்தால் விரைவில் குடும்பத்தினரின் எண்ணிக்கை 11 ஆகும் என்று ஆஷ்லே கூறியுள்ளார்.
இதுகுறித்து கமென்ட் செய்துள்ள நெட்டிசன்கள் உங்கள் 5 பேருக்கு இடையே சண்டை வராதா எனறு கேட்டுள்ளனர். இதற்கு பதில் அளித்துள்ள ஆஷ்லே, நாங்கள் ஒரு குடும்பமாக எங்களது குழந்தைகளை வரவேற்க தயாராக உள்ளோம் என பதில் அளித்துள்ளார். நாங்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் எங்கள் குழந்தைகளுக்கு நல்லது என்று கூறியுள்ளார்.