மெக்சிகோவில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்து... ஒரு வயது குழந்தை உள்பட 27 பேர் பலியான சோகம்!!

 
Mexico

மெக்சிகோவில் பேருந்து பள்ளத்தில் கவிந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் தலைநகர் நகரத்திலிருந்து யோசோன்டுவாவுக்குச் பேருந்து ஒன்று சென்ற கொண்டிருந்தது. அந்தப் பேருந்து மாக்டலேனா பெனாஸ்கோ மாகாணத்தில் நேற்று உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணியளவில் மலை பகுதியில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பேருந்தில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள், நகர பணியாளர்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை தனியார் தனியார் ஆம்புலன்ஸ்கள் மூலம் ஐஎம்எஸ்எஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Mexico

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பேருந்தை அகற்ற கிரேன்கள் கோரப்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் பிராந்தியத்தில் உள்ள வெவ்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பேருந்து விபத்தில் முதலில் 25 பேர் பலியானதாகவும், 17 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், பலத்த காயமடைந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்ததை அடுத்து பலியானோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஒரு வயது கைக்குழந்தை உள்பட 27 பேர் பலியாகினர். அவர்களில் 13 பேர் பெண்கள், 13 பேர் ஆண்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

Mexico
இந்த விபத்து குறித்து ஒசாகா மாநில வழக்கறிஞர் பெர்னார்டோ ரோட்ரிக்ஸ் அலமில்லா கூறுகையில், “முதற்கட்ட எண்ணிக்கையின்படி, 27 பேர் இறந்தனர் மற்றும் 17 காயமடைந்தவர்கள் மருத்துவ கவனிப்புக்காக பிராந்தியத்தில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறினார். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

From around the web