பள்ளி வேன் மீது லாரி மோதி விபத்தில் 19 மாணவர்கள் உள்பட 21 பேர் பலி! வைரல் வீடியோ

 
Southafrica

தென்னாப்பிரிக்காவில் பள்ளி வேன் - லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 19 சிறுவர்கள் உட்பட 21 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாபிரிக்காவின் குவாசுலு - நடால் மாகாணத்தில் ஆரம்பப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவ - மாணவிகள், வகுப்பை நிறைவு செய்துவிட்டு நேற்று மாலை குழந்தைகள் பள்ளி மினி வேனில் வீட்டிற்கு புறப்பட்டனர்.

southafrica

மினி வேனில் 19 குழந்தைகள், வேன் ஓட்டுநர், உதவியாளர் என மொத்தம் 21 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த வேன் தேசிய நெடுஞ்சாலைக்கு சென்றபோது, எதிர்திசையில் வந்த கனரக லாரி பள்ளி வாகனத்தின் மீது மோதியுள்ளது.

இந்த அதிபயங்கர விபத்தில் மினி வேனில் பயணம் செய்த 19 குழந்தைகள் உள்பட 21 பேர் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.


மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web