2 முறை மார்பகங்களில் அறுவை சிகிச்சை... பார்பி பொம்மைபோல மாறுவதற்கு ரூ.82 லட்சம் செலவு செய்த இளம்பெண்!!

 
Jazmyn

ஆஸ்திரேலியாவில் ஜாஸ்மின் பாரஸ்ட் என்ற பெண் பார்பியாக மாற ஆசைப்பட்டு ரூ.82 லட்சம் செலவு செய்துள்ளார

உலக முழுவதும் மக்களிடத்தில் பார்பி பொம்மைகள் மீதான விருப்பம் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக பெண்கள் மத்தியில் பார்பி பொம்மைகள் மீதான பிரியம் அதிகம். இதனால் பார்பி பொம்மைகள் தயாரிப்பதற்காக பல நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு தயாரித்து விற்பனை செய்து வருகின்றன.

Jazmyn

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாண்ட் பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்மின் ஃபாரஸ்ட். இவருக்கு வயது 25. இவர் தான் பார்பி பொம்மை போல் மாறுவதற்காக ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை செலவு செய்துள்ளார். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 82 லட்சம் ரூபாய் செலவு செய்து அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதற்காக தனது மார்பகத்தில் இருமுறை அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

மேலும், கை வயிறு முதுகு தொடை கன்னம் உள்ளிட்ட பகுதிகளில் சிகிச்சை மேற்கொண்டுள்தோடு, பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்து கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கு பின்னும் இருபாலராலும் நான் சிறப்பாக நடத்தப்படுவதாகவும், அதே நேரம் தன்னுடைய தன்னம்பிக்கை அளவு உயர்ந்துள்ளதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

A post shared by Jazmyn Forrest (@jazmynforrest1)

முன்னதாக ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜெஸ்சி, பார்பி பொம்மையை போல் ஆக வேண்டும் என ஆசைப்பட்டு 3 முறை மார்பகங்களை அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதற்காக அவர் சுமார் 70 ஆயிரம் டாலர்களை செலவு செய்துள்ளார். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 53 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web