17 வயது நிறைமாத கர்ப்பிணி மின்சாரம் தாக்கி பலி.. குளித்துவிட்டு செல்போனை சார்ஜ் போட்டபோது விபரிதம்!

 
Brazil

பிரேசிலில் குளித்து முடித்துவிட்டு, தன் போனை சார்ஜில் போடச் சென்ற 17 வயது இளம்பெண் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலின் பாரைபா மாகாணத்தில் உள்ள காம்பினா கிராண்டேவில் அமைந்துள்ள மான்டே காஸ்டெலோ பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிபர் கரோலெய்ன் (17). இவர், நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த 17-ம் தேதியன்று, பெண்ணின் கணவர், திடீரென ஏதோ பலமாக விழும் சத்தமும், தன் மனைவி பயங்கரமாக அலறும் அத்தமும் கேட்டு ஓடிவந்து பார்த்திருக்கிறார்.

shock

உடனடியாக அவர் தன் மனைவியைத் தூக்க முயல, அவருக்கு ஷாக் அடித்திருக்கிறது. அவரது மனைவி, ஜெனிபர் குளித்து முடித்துவிட்டு வந்து, ஈரத்துடன் தனது போனை சார்ஜ் போட முயன்றிருக்கிறார். அவர் எக்ஸ்டென்ஷன் போர்டில் தனது மொபைல் சார்ஜரை பொருத்த முயலும்போது, அவரை மின்சாரம் தாக்கியுள்ளது.

உடனடியாக ஜெனிபரின் கணவர் அவசர உதவியை அழைக்க, போலீசாருடன் வந்த அவசர உதவிக்குழுவினர் ஜெனிபரை பரிசோதிக்கும்போது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரித்தனர். மின்சாரம் தாக்கியதில் அவரது வயிற்றிலிருந்த 9 மாத குழந்தையும் இறந்துவிட்டது.

Brazil

தம்பதியர் குழந்தைக்காக தொட்டில் எல்லாம் தயார் செய்துவைத்துவிட்டு பிரசவத்துக்காக காத்திருந்தபோது ஜெனிபர் உயிரிழந்துள்ளதால், அந்த குடும்பம் முழுவதுமே சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளது.

From around the web