இஸ்ரேல் தாக்குதலால் 2 வாரங்களில் 1,600 குழந்தைகள் படுகொலை.. UNICEF வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!

 
Israel

இஸ்ரேல் தாக்குதலால் 2 வாரங்களில் சுமார் 1,600 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக UNICEF அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த பிரச்சினையைத் தீர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், அப்பகுதியில் அமைதி திரும்பவில்லை. தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவி வருகிறது.

Israel

இந்த நிலையில், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆட்சி நடத்தி வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந் தேதி இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து, ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது இஸ்ரேல் ராணுவம் கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. எந்த நேரத்திலும் தரைவழித் தாக்குதலை மேற்கொள்ளவும் இஸ்ரேல் தயாராகி வருகிறது. 

இந்த போரினால் பாலஸ்தீனியர்கள் இதுவரை 3,785 பேர் கொல்லப்பட்டதாகவும் கிட்டத்தட்ட 12,500 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஹமாஸ் தரப்பு தெரிவித்துள்ளது. அதுபோல, இஸ்ரேலில் 1,400 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 203 பேர் ஹமாஸிடம் பிணைக் கைதிகளாக உள்ளனர் என்று இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

Israel

இந்த நிலையில், கடந்த 2 வாரங்களில் மட்டும் சுமார் 1,600 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக UNICEF அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், இந்த போரில் சுமார் 1,661 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளதாகவும், 100 குழந்தைகள் காணவில்லை என்றும் UNICEF தெரிவித்துள்ளது.

From around the web