அமெரிக்காவில் 14 வயது சிறுவனுக்கு மாரடைப்பு.. பயிற்சியில் ஓடும்போது சுருண்டு விழுந்து பலி!

 
Knox MacEwen

அமெரிக்காவில் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட 14 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் மாணவன் நாக்ஸ் மேக்ஈவன் (14). இவர், டேவிஸ் வெஸ்டர்ன் உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தான். இவர், தனது பயிற்சிக்காக ஓட்ட பந்தயம் உள்ளிட்டவற்றில் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

Knox MacEwen

இந்த நிலையில், 5 கி.மீ. ஓட்ட பந்தய பயிற்சியை ஈவன் மேற்கொண்டபோது, மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளான். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அவசரகால சிகிச்சை குழுவினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்றுள்ளனர்.

எனினும், சிறுவன் ஈவனை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. இந்த சம்பவத்திற்கு பள்ளியின் முதல்வர் ஜிம்மி அர்ரோஜோ இரங்கல் தெரிவித்து உள்ளார். ஈவன் அந்த பகுதியில் பரவலாக நன்மதிப்பை பெற்றிருப்பதுடன், தன்னார்வலராகவும் செயல்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. ஈவனின் இறுதி சடங்கிற்காக குடும்ப நண்பர் ஒருவர் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு, ரூ.55 லட்சம் சேர்த்துள்ளார். 

Knox MacEwen

அமெரிக்காவில் சில மாதங்களுக்கு முன் கூடைப்பந்து விளையாட்டுக்கான பயிற்சியின்போது, காலிப் ஒயிட் (17) என்ற மாணவர் சரிந்து விழுந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சக மாணவர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது.

From around the web