உலகம் முழுவதும் ஒரே நாளில் ஆயிரத்து 324 பேருக்கு கொரோனா.. 6 பேர் பலி!
கடந்த 24 மணி நிலவரப்படி உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 70.45 கோடியாக உயந்துள்ளது.
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் அது பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. இப்படி தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால், இதை சமாளிக்க உலகின் பல்வேறு நாடுகளும் திணறி வருகிறது. வளர்ந்த நாடுகள் தொடங்கி பின் தங்கிய நாடுகள் வரை எதுவும் இதற்கு தப்பவில்லை.
இப்போது ஓமிக்ரான் கொரோனா, குறிப்பாக பிஏ4 மற்றும் பிஏ வகை கொரோனா தான் உலகெங்கும் பரவி வருகிறது. இந்த வகை கொரோனா வைரஸ்கள் பல நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது.
உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 70 கோடியே 45 லட்சத்து 38 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 2 கோடியே 21 லட்சத்து 34 ஆயிரத்து 923 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 34 ஆயிரத்து 965 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 67 கோடியே 53 லட்சத்து 94 ஆயிரத்து 819 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், கொரோனாவால் இதுவரை 70 லட்சத்து 8 ஆயிரத்து 958 பேர் உயிரிழந்துள்ளனர்.