தங்க சுரங்கத்தில் மண் சரிந்து 12 பேர் பலி.. 18 பேர் மாயம்.. இந்தோனேசியாவில் பயங்கரம்

 
Indonesia

இந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி தீவில் உள்ள கோரோண்டாலோ பகுதியில், சட்டவிரோதமாக தங்கம் சுரங்கம் ஒன்று இயங்கி வந்துள்ளது. சுரங்கத்தில் உள்ள சிறு குழிகளில், 30-க்கும் மேற்பட்டோர் இறங்கி தங்கத்தை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். 18 பேர் மாயமாகி உள்ளனர்.

Indonesia

இதனை உள்ளூர் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். மாயமாகி உள்ளவர்களை தேடும் பணியில் ராணுவம், காவல் துறை, மீட்பு படையினர் என மொத்தம் 164 ஈடுபட்டுள்ளனர். மீட்பு படையினர் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது. மழை தொடர்வதாலும், சாலை சேற்றினால் சூழப்பட்டு இருப்பதும் இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்திரத்தை பயன்படுத்தி மீட்பு பணி மேற்கொள்வதற்கான சாதகம் இருந்தால் மட்டுமே அந்த பணி நடக்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indonesia

79 பேர் தங்கத்தை எடுக்கும் நோக்கில் சுரங்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய முறையில் இந்த சுரங்க பணியை அவர் மேற்கொண்டுள்ளனர். அப்போதுதான் மழையால் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக வெள்ள எச்சரிக்கை இந்த பகுதியில் தரப்பட்டு இருந்ததாக பேரிடர் மேலாண்மை முகமையின் செய்தித் தொடர்பாளர் அப்துல் முஹாரி தெரிவித்துள்ளார்.

From around the web