பள்ளிகள் மீது துப்பாக்கி சூடு அச்சுறுத்தல் விடுத்த 11 வயது சிறுவன்.. அமெரிக்காவில் பரபரப்பு

 
Florida

அமெரிக்காவில் பள்ளிகள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்திய சிறுவனை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள 2 பள்ளிகளில் கூட்டு துப்பாக்கி சூடு நடத்துவதாக அச்சுறுத்தியதற்காக 11 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். கார்லோ கிங்ஸ்டன் டோரெல்லி என்ற சிறுவன், அவரது வகுப்பு தோழர்களிடம் இருந்து பெற்ற குறிப்புக்குப் பிறகு, திங்களன்று காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

Florida

இது தொடர்பாக ஷெரிப் மைக் சிட்வுட் கூறுகையில், சிறுவனின் வீட்டில் ஏர்சாஃப்ட் ரைஃபிள்கள், பிஸ்டல்கள், போலியான தோட்டிகள், கத்திகள், வாள்கள் மற்றும் பிற ஆயுதங்களை கண்டுபிடித்தனர். மேலும் சிறுவன் உருவாக்கிய இலக்குகளின் கொலை பட்டியலையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.


ஜார்ஜியாவின் அபலாச்சி உயர்நிலைப் பள்ளியில் 14 வயது சிறுவன் நான்கு பேரை கொன்றதற்காக குற்றச்சாட்டுக்கு உள்ளானதை தொடர்ந்து, இந்த கைது நடந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web