பில்லியர்ட் விளையாட்டு அரங்கில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலி.. ஹோண்டுராஸில் சோகம்!

 
Honduras

ஹோண்டுராஸில் பில்லியர்ட் விளையாட்டு அரங்கில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸின் வடக்கு பகுதியில் சொழமா என்ற நகரம் உள்ளது. இந்த நகரில் பில்லியர்ட் விளையாட்டு அரங்கில் நேற்று இரவு சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த விளையாட்டு அரங்கிற்கு வந்த துப்பாக்கி ஏந்திய நபர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிசூடு நடத்தினார்.

Gun

இந்த துப்பாக்கிச்சூட்டால் அதிர்ச்சி அடைந்த மக்கள் விளையாட்டு அரங்கில் இருந்து தப்பியோட முயற்சித்தனர். ஆனால், அந்த நபர் தொடர்ந்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அதேவேளை துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Police

இந்த துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து தாக்குதல் நடந்த பகுதியில் ஊரடங்கு பிறப்பித்து அந்நாட்டு அதிபர் ஐரிஷ் ஜியோமாரா கெஸ்ட்ரோ செமியிண்டொ உத்தவிட்டுள்ளார். இந்த சம்பவம் அந்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web