10 ஆண்டுகள்.. உணவில் போதை மருந்து.. 83 நபர்கள்.. மனைவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கணவன்.. பகீர் சம்பவம்!

 
France

பிரான்சில் நபர் ஒருவர் தனது மனைவியை 10 ஆண்டுகாலம் போதை மருந்து கொடுத்து 80க்கும் மேற்பட்டோர் மூலம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸின் ஏவிக்னான் பகுதியைச் சேர்ந்தவர் டோம்னிக் பி. இவருக்கும் பிரான்சுவா என்ற பெண்ணுக்கும் 50 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் இருவரும் ஒன்றாக வசித்து வரும் நிலையில், கடந்த 10 ஆண்டு காலமாக டோம்னிக் தனது மனைவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். 2011ம் ஆண்டு தொடங்கி இவர் தனது மனைவியின் உணவில் ஒரு வகை போதை மருந்தை தொடர்ச்சியாக கலந்து கொடுத்து மயக்க நிலைக்கு ஆளாக்கியுள்ளார்.

பின்னர் தனது மனைவி மயக்க நிலைக்கு சென்றதும் அந்நியர்களை தனது வீட்டிற்கு வரவழைத்து அவர்களை மனைவியுடன் பாலியல் உறவில் ஈடுபட செய்து அதை வீடியோ படம் பிடித்து வைத்துள்ளார். இவ்வாறு 2011 ஆண்டு தொடங்கி 2020 வரை சுமார் 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக இந்த குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார். 

Tablet

இவ்வாறு கடந்த பத்து ஆண்டுகளில் 92 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் இவர் மனைவிக்கு நடந்துள்ளது. குறைந்தது 83 அந்நிய நபர்கள் மனைவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதை இவர் பதிவு செய்து வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், பலர் இதில் ஈடுபட்டிருக்காலம் எனக் கூறப்படுகிறது. இந்த குற்ற செயலில் ஈடுபட்ட 51 பேரை போலீசார் அடையாளம் கண்டு விசாரித்துள்ளனர். இவர்களில் 26 முதல் 73 வரை உள்ளவர்கள் அடக்கம். இதற்காக ஆன்லைனில் தளம் ஒன்றை அமைத்து அதன் மூலம் அந்நிய நபர்களுக்கு அழைப்பு விடுத்த இந்த குற்ற செயலை அவர் செய்து வந்துள்ளார்.

சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக யாரும் புகையிலை பயன்படுத்த கூடாது, வாசனை திரவியங்களை போட்டுக்கொள்ளக்கூடாது என்றுள்ளார். இதன் மூலம் மயக்கத்தில் இருக்கும் மனைவிக்கு சந்தேகமோ மயக்க நிலையில் மாற்றம் ஏற்பட்டு விழித்து விடக்கூடாது என்பதை கவனமாக பார்த்து வந்துள்ளார். அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் வரக்கூடாது என அந்நிய நபர்களின் வாகனத்தை வீட்டின் அருகே நிறுத்தாமல் தள்ளி வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்க வேண்டும் என வழிகாட்டியுள்ளார்.

police

இந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களை இவர் USB கருவியில் ABUSES என்ற பெயரில் பைல்லாக வைத்து ஸ்டோர் செய்துள்ளார். இவரது நடவடிக்கைகள் தொடர்பாக பிரெஞ்சு போலீசாருக்கு 2020-ல் சந்தேகம் ஏற்படவே விசாரணையை தொடங்கியது. அப்போது தான் இந்த திடுக்கிடும் உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக அம்பலமாகத் தொடங்கியது. முழு உண்மைகள் மனைவிக்கு தெரியவரவே அவர் உடனடியாக விவாகரத்து பெற்றார்.

இத்தகைய பகீர் குற்றச்செயலில் ஈடுபட்ட டோம்னிக்கை கைது செய்த பிரெஞ்சு போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. வழக்கில் குற்றம் நிரூபணமாகி தீர்ப்பு வரும் போது கணவருக்கு குறைந்தது 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

From around the web