காய்கறிகளின் வரத்து குறைந்தது.. உச்சத்தில் காய்கறி விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி!
கடும்பனி காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தைக்கு கடந்த சில நாட்களாக காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் விற்பனை விலை அதிகரித்துள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாட்டின் ஒட்டன்சத்திரம், தேனி, திண்டுக்கல், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் காய்கறி வரவழைக்கப்பட்டாலும் பெருமளவு காய்கறி வரத்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தே வருகின்றது. இந்த நிலையில், பனி பாதிப்பு காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தைக்கு கடந்த சில நாட்களாக காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக விற்பனை விலையும் சற்று அதிகரித்துள்ளது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 22 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 12 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 12 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பீன்ஸ் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், பச்சை பட்டாணி ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 12 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் புடலங்காய் 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.