மின்சாரம் தாக்கி வாலிபர் பலி.. கொட்டும் மழையில் நண்பரை பார்க்க சென்றபோது நேர்ந்த சோகம்

 
Rain

கடலூரில் மோட்டர் சைக்கிளில் சென்ற நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் முதுநகர் தேசாய் சந்து பகுதியை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். இவரது மகன் விக்னேஸ்வரன் (27). இவர் ஐடிஐ படித்து முடித்துவிட்டு அவரது தந்தையின் மளிகைக்கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த சூழலில் நேற்று இரவு விக்னேஸ்வரன் வீட்டில் இருந்து சின்ன பிள்ளையார்மேட்டில் உள்ள அவரது நண்பரை பார்க்க மோட்டாா் சைக்கிளில் புறப்பட்டார்.

electric shock

அப்போது இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து கொண்டிருந்தது. அறுபடை வீடு நகர் அருகில் சென்று கொண்டிருந்தபோது, கனமழையின் காரணமாக அறுந்து விழுந்து தொங்கிக் கொண்டிருந்த மின்கம்பி எதிர்பாராதவிதமாக விக்னேஸ்வரன் மேல் உரசியது.

இதில் மின்சாரம் தாக்கி மோட்டார் சைக்கிளுடன் அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, ஏற்கனவே விக்னேஸ்வரன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Cuddalore OT PS

இதுகுறித்த புகாரின் பேரில் கடலூா் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

From around the web