காதல் திருமணம் செய்த இளைஞர் தற்கொலை.. விழுப்புரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

 
Villupuram

விழுப்புரம் அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு அருகே உள்ள மோட்சகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் கணேஷ். இவர், கோமலா என்ற பெண்னை காதலித்து கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். காதல் மனைவியுடன் அடிக்கடி சண்டை ஏற்பட்டதாலும் குடும்ப கஷ்டத்தினாலும் கோமலா கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

dead-body

இதனையடுத்து வீட்டிலியே இருந்த சங்கர் கணேஷ், தற்கொலை செய்து கொண்டுள்ளார். இளைஞர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது நண்பர்களுக்கு வீடியோ ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார். அந்த வீடியோவில், குடும்ப கஷ்டத்தினாலும், காதல் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை என்பதாலும் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறியுள்ளார்.

எல்லோருக்கும் வாழ்க்கையில் கஷ்டம் இருக்கும். வாழ்க்கையே கஷ்டமாக இருப்பதால் இந்த முடிவை எடுப்பதாக வீடியோவில் தெரிவித்துள்ளார். இளைஞர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக வளவனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Valavanur PS

தகவலின் பேரில் போலீசார் இளைஞரின் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை செய்து வருகின்றனர். காதல் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை எனக் கூறி இளைஞர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web