வீலிங் செய்து கொண்டே பட்டாசு வெடித்த இளைஞர்.. திருச்சியில் ஒருவர் கைது!

 
Trichy

திருச்சியில் பைக்கில் வீலிங் செய்து கொண்டே பட்டாசு வெடித்த இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சமீப காலமாக போலீசார் நடவடிக்கையால் இரவு நேரங்களிலும் சாகச பயணங்கள் செய்வது குறைந்து வந்த நிலையில் தற்போது தீபாவளியை முன்னிட்டு இருசக்கர வாகனத்தில் வாலிபர்கள் ராக்கெட் போன்ற வெடிகளை ஆபத்தான முறையில் சாகசம் செய்து கொண்டே வெடிக்கும் காட்சிகளை சமூக வலைத்தளத்தில் தற்போது பதிவிட ஆரம்பித்துள்ளனர்.

இரவு நேரங்களில் இதுபோன்ற ஆபத்தான முறையில் சாகசம் செய்து கொண்டே வெடிக்கும் வீடியோக்களை பதிவிட்டு லைக்குகளுக்காக செய்யும் செயல்களை சமூக வலைத்தளம் மூலமாக போலீசில் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக நம்பர் பிளேட்டுகளை கழட்டி வைத்துவிட்டு இதுபோன்று வாலிபர்கள் தலைக்கவசம் மாட்டிக் கொண்டு செய்கின்றனர்.


இருப்பினும் மீண்டும் தலை தூக்கி உள்ள வாலிபர்களின் பைக் சாகச பயண வீடியோ பதிவுகள் குறித்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இந்த சாகத்தில் ஈடுப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 9-ம் தேதி சமயபுரம் அருகே உள்ள புறநகர் சாலையில் திருச்சி உயர் கொண்டான் வாய்க்கால் கரை ஓரமாக உள்ள கள்ளாங்காடு பகுதியை சேர்ந்த அஜய், தஞ்சாவூர் சேர்ந்த மணிகண்டன் இருவரும் பைக் வீலிங் செய்துள்ளனர். பைக்கில் வானவேடிக்கை கட்டியது அஜய் என திருச்சி மாநகர போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

arrest

அவர்கள் இருவர் மீது சட்டப்பிரிவு 279 கீழ் வழக்குப் பதிவு செய்ய உள்ளனர். வாகனத்தை (அதிவேகமாக இயக்கியது தொடர்பாக) தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டனை பிடித்து திருச்சி மாவட்ட காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ய விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web