படுத்தே விட்டாரய்யா... முதலமைச்சர் மீது எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!!

 
மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் தலையாட்ட முடியாது – எடப்பாடி பழனிசாமி மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் தலையாட்ட முடியாது – எடப்பாடி பழனிசாமி

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன் என்று வீராவேசமாக பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் இப்போது டெல்லிக்கு நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

”மத்திய அரசு தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன்" என்று வீராவேசமாக பேசிய பொம்மை வேந்தர் மு.க.ஸ்டாலின், தற்போது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு பறக்கிறாராம்!

தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார்! அன்று 2G-க்காக அப்பா டெல்லி சென்றார்... இன்று... டாஸ்மாக்... தியாகி... தம்பி... வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ? படுத்தே விட்டாரய்யா... எல்லாம் "தம்பி" படுத்தும் பாடு!” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.


 

From around the web