சிக்கன் பிரியாணியில் புழு..? அதிர்ந்து போன வாடிக்கையாளர்! 

 
Ramnad

ராமநாதபுரத்தில் சாப்பிட வாங்கிய பிரியாணியில் புழு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் பிரபலமான பிரியாணி கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையில் பட்டினம்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் மூன்று பிரியாணி பார்சல் வாங்கிச் சென்றுள்ளார்.

Briyani

இதை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்ற அவர், சாப்பிட முயன்றபோது பிரியாணியில் புழு கிடந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், தனது செல்போனில் படம் எடுத்து அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பிரியாணி கடையில் 3 பார்சல் வாங்கியதாகவும் அந்த பிரியாணியில் இரண்டு புழுக்கள் இருந்தது என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளிகளிடம் புகார் அளித்தார். 

Ramnad

இதையடுத்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பிரியாணி கடையில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கிருந்த பிரியாணி மற்றும் உணவுப்பொருள்களை அவர்கள் ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து வாடிக்கையாளர் அளித்த புகாரின் பேரில் அந்த கடைக்கு நோட்டீஸ் வழங்கிச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web