முடிவுக்கு வந்த ஒர்க் ஃப்ரம் ஹோம்!!பரந்தூர் செல்கிறார் நடிகர் விஜய்!

சென்னைக்கு புதிய விமானநிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டநாட்களாக இருந்து வருகிறது. ஐதராபாத், பெங்களூர் விமான நிலையங்கள் நவீனமாக பரந்து விரிந்த நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை விமான நிலையம் இன்னும் பழைய குறுகலான இடத்திலேயே இயங்கி வருகிறது. தொலைதூரம் செல்லக்கூடிய விமானங்களும் சென்னைக்கு வருவதில்லை. வருங்காலத்தில் இன்னும் நெருக்கடி ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு புதிய விமான நிலையம் பரந்தூரில் அமைப்பதற்கு அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பரந்தூர் விமான நிலையம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலத்தையும், நீர்நிலைகளையும் அழித்துவிடும் ஆயிரக்கணக்கான கிராமப்புற தமிழர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என்று பலதரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. பாதிக்கப்படும் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வொர்க் ஃப்ரம் ஹோம் அரசியல்வாதி என பெயர் பெற்று விட்ட தவெக தலைவர் நடிகர் விஜய், அதை மாற்றும் எண்ணத்துடன் முதலில் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவை சந்திக்க பரந்தூர் செல்ல முடிவெடுத்தார். இதற்காக காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. காவல்துறை அனுமதி அளித்ததைத் தொடர்ந்து இன்று பரந்தூர் செல்கிறார் நடிகர் விஜய்.
மக்கள் போராட்டங்களில் பங்கெடுக்க முடிவு செய்துள்ள நடிகர் விஜய் யை இனி வொர்க் ஃப்ரம் ஹோம் அரசியல்வாதி என்று சொல்ல முடியாதல்லவா?