ஆச்சரியம்.. ஒரே தேங்காயில் 3 அறைகள்.. பரவசத்தில் பக்தர்கள்!!

 
TVMalai

திருவண்ணமாலை அருணாசலேஸ்வரர் கோவில் பக்தர் ஒருவர் உடைத்த தேங்காயில், மூன்று அறைகள் இருந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும். இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

TVmalai

அந்த வகையில் நேற்று கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் தேங்காய் உடைக்குமாறு கோவில் பணியாளர்களிடம் கொடுத்துள்ளார். அப்போது அதை உடைத்து பார்த்த போது, ஒரே தேங்காய்க்குள் மூன்று அறைகள் இருந்தது தெரியவந்தது. 

இதனால் பக்தர்கள் பெரும் பரவசத்திலும் ஆச்சரியத்திலும் ஆழ்ந்தனர். பக்தர்கள் பலரும் இது கடவுளின் சித்தம் எனக் கூறி அருணாச்சலரேஸ்வரரை வணங்கி சென்றனர்.

coconut

தற்போது இந்த மூன்று அறைகள் கொண்ட தேங்காய் புகைப்படங்கள் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனிடையே மரபணு காரணங்களால், இது போன்று தேங்காய்களில் கூடுதல் அறைகள் உருவாவது இயல்பு என அறிவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

From around the web