ரயிலில் வந்த சூட்கேசில் பெண் சடலம்.. சென்னையில் பரபரப்பு

 
Andhra

சென்னை வந்த ரயிலில் 60 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் சூட்கேசில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த நபர் தனது மகளுடன் சென்னை நோக்கி வந்த புறநகர் ரயிலில் பயணம் செய்துள்ளார். அந்த ரயில் மீஞ்சூர் ரயில் நிலையத்தை அடைந்தபோது, ரயிலில் இருந்து இறங்கிய தந்தையும், மகளும் தாங்கள் கொண்டு வந்த சூட்கேசை பிளாட்பாரத்தில் வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

murder

இதனை கண்ட போலீசார் சந்தேகமடைந்து இருவரையும் பிடித்து விசாரித்துள்ளனர். பின்னர் அவர்கள் கொண்டு வந்த சூட்கேசை சோதனை செய்தபோது, அதில் 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் சடலம் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து தந்தை, மகள் இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

Police

முதற்கட்ட விசாரணையில், தனது 17 வயது மகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததால், ஆத்திரத்தில் தனது மகளுடன் சேர்ந்து அந்த பெண்ணை கொலை செய்ததாக கூறிய நிலையில், தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நகைக்காக மூதாட்டியை அடித்து கொலை செய்ததாக தந்தை, மகள் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் போலீசார் தொடர்ந்து அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web