பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்.. நடத்துநரின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய மாணவி.. பகீர் வீடியோ!

 
Erode

ஈரோட்டில் தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவியை நடத்துநர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பொதுவாக கதவுகள் இருக்காது. குறிப்பாக மலைப்பகுதிகளில் செல்லும் பேருந்துகளிலும், சென்னை செல்லும் தொலை தூர பேருந்துகளில் மட்டும் கதவுகள் இருக்கும். பேருந்துகள் அதிவேகமாக செல்லும் போது, சில நேரங்களில் பிரேக் பிடிப்பார்கள். அப்படி பிரேக் பிடிக்கும் போதோ அல்லது ஏதேனும் வாகனம் வரும் போது வேகத்தை குறைக்கும் போதே, பேருந்தின் படிக்கெட்டை ஒட்டிய பகுதிகளில் நின்று இருப்போர் கம்பியை பிடிக்காமல் இருந்தால் தவறி விழுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

சில சமயங்களில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் கம்பியை பிடிக்காமல் போய் விழுந்த நிகழும் நடந்துள்ளது. அண்மையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஓடும் பேருந்தில் கணவன் தாக்க முயன்ற போது, தப்பிக்க கம்பியை பிடிக்காமல் நகர்ந்த பெண் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அறங்கேறி உள்ளது.

Erode

அந்த வகையில், ஈரோட்டில் தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவியை நடத்துநர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றி உள்ளார்.

ஈரோட்டில இருந்து மேட்டூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பெண் ஒருவர் இறங்க வேண்டும் என்று நினைத்து பேருந்தின் முன்பக்கத்தில் படியை ஒட்டி வந்து கொண்டிருந்தார். திடீரென கண் இமைக்கும் நேரத்தில் பேருந்தில் இருந்து தவறி விழப்போனார். உடனே நடத்துனரின் துரிதமான மற்றும் மிக கவனமான செயலால் அந்த மாணவியின் உயிர் காப்பாற்றபட்டுள்ளது. முடியை பிடித்து இழுத்து காப்பாற்றியது வலிக்கிறதா? என தொட்டு பார்த்து கேட்டார்.


இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இதை பலரும் பாராட்டி வருகிறார்கள். இதுகுறித்து கருத்து தெரிவித்த நெட்டிசன் ஒருவர், கண்ணிமைக்கும் நேரத்தில் உயிரைக் காப்பாற்றி இருக்கிறார். இருப்பினும் கேரளாவைப் போல அனைத்துப் பேருந்துகளிலும் கதவுகளை அடைத்த பின்பே இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

From around the web