கைது செய்யப்படுவாரா விஜய்? கரூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!!
நெரிசல் காட்சிகளைப் பார்த்து வீட்டில் இருக்க முடியாமல் உடனே புறப்பட்டு கரூர் வந்தேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இரவோடு இரவாக தனி விமானம் மூலம் திருச்சி வந்து, அங்கிருந்து காரில் வந்த முதலமைச்சர் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
காயமடைந்தவர்களை மருத்துவமனயில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். ”இந்த துயரச் சம்பவம் நடந்திருக்கக் கூடாது. இனிமேல் நடக்கக் கூடாது. 39 பேர் உயிரிழந்துள்ளனர். 51 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெறுபவர்கள் நலம் பெறுவார்கள் என நம்புகிறேன்.
உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 10 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சமும் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளேன். நடந்த சம்பவம் குறித்து விசாரிக்க தனிநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் உண்மை வெளிவரும். அதன் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு அரசியல் நோக்கத்துடன் எதையும் கூற விரும்பவில்லை என்று பதிலளித்தார் முதலமைச்சர்.
