உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வருமா? 10 மசோதாக்களுக்கு விடிவு காலம் பிறக்குமா?

 
Supreme-Court

ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமலும் சில மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததையும் எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பு இன்று வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் சாசன  விதி 200ன் படி, ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்தால் ஆளுநர் கட்டாயம் அதற்கு ஒப்புதல் தந்தாக வேண்டும். பொதுப்பட்டியலில் உள்ள விவகாரங்கள் தொடர்பான மசோதாக்களை மட்டுமே குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கமுடியும்.

விதி 200 ஐ மீறி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களை ஆளுநருக்கு திருப்பி அனுப்பவும், அவைகள் உட்பட நிலுவையில் உள்ள 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம் செய்யப்பட்டுள்ளது.

24 மணி நேரத்திற்குள் அரசுடன் கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்த நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. பொதுப்பட்டியலில் இல்லாத மசோதாக்களை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்ப வேண்டும் என்றும். நிலுவையில் உள்ள 10 மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இன்று ஒரு முக்கியநாளாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

From around the web